பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

ணம் அவருக்கு எழலாயிற்று. அத்தின்பண்டம் எதுவும் அவர் பெற்றாரில்லை; வேறெதுவும் தின்னும் பொருட்டுக் கிடைக்கவும் இல்லை. நள்ளிரவுக்குப் பின்னும் அவர் நடக்க வேண்டி நோட்டது. இறுதியில், இனி நடக்க முடியாது, என்று களைத்து அலுத்து ஓய்ந்து போய் ஓரிடத்தில் உட்கார்ந்தார் : பின்பு தளத்தின் அடியில் ஒரு பொந்து இருக்கக்கண்டு, அதனுட்புகுந்து படுத்துக்கொண்டார். அத்தளத்தின்மீது பல மக்கள் நடந்து சென்றார்கள். அவர்கள் அடியிட்ட ஒலியெல்லாம் அவர் இரவு முழுதும் கேளாது இருந்திருக்க முடியாது. காலையில் எழுந்ததும், தீ வேட்கைப் பசியைப் போக்கிக்கொள்ள வழியில்லையே என்ற திகைப்பே அவருக்கு இருந்திருக்க வேண்டும். எழுந்தவுடன், தாம் ஒரு கப்பலின் அருகே இருப்பதையும், அக்கப்பலிலிருந்து பொருள்கள் இறக்கப்படுவதையும் கண்டார். உடனே ஆண்டு ஓடி வங்கத்தலைவனை ஒன்று வேண்டிக் கொண்டார். அவனும் மனமுவந்து இசைந்தான். இப்பொழுது வாஷிங்குடன் கப்பற்பண்டங்கள் சிலவற்றைக் கீழே இறக்க உதவி புரிந்து, தமது காலையுண்டிக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக்கொண்டுவிட்டார். அக்காலையுண்டி அவரது தாளாண்மையால் வந்ததால், அவருக்குப் பேருவகை அளித்தது. எத்தனையோ ஆயிரம் அருமையான சிற்றுண்டி விருந்துகள் அவருக்குப் பின்னாட்களில் அளிக்கப்பட்டன ஆயினும், அன்று