பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

கல்வி இன்றியமையாதது என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். அவர்களூட்பலர் நரைமுதிர் யாக்கையராய் இருந்தமையால், செவ்வனே மனப்பாடம் பண்ணமாட்டாதவராய் இருந்தனராயினும், அவரது ஆர்வம் பெருகியதற்கு மாத்திரம் அளவில்லை. பலர் புத்தகத்தோடு போராடவேண்டியிருந்ததோடன்றி, அறிவினைக் கொல்லும் நீச்ச நிரப்பொடு நேர் நின்று வாகை சூட வேண்டியவராயும் இருந்தனர். கோற்கண்ணராய பெற்றோரைப் பேண வேண்டிய சிலரும், உதவியை இன்றியமையாது வேண்டி நிற்கும் மனைவியின் உண்டிக்கு வழி பண்ண வேண்டிய சிலரும் ஈண்டு மாணவராயிருந்தனர் என்பது அறியத்தக்கது. இம் மாணவர் எல்லாருக்கும் ஓர் அரிய குறிக்கோள் இருந்தது. அஃது எதுவெனில், தத்தம் ஊரிலேயுள்ள மக்களை உயர்த்துதற்குத் தங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே. அவர்தம்முள் தன்னையே பற்றிக் கவலைப்பட்டவன் ஒருவனும் இருந்திலன்.

ஆசிரியர்களும், அதிகாரிகளும் இராப்பகல் எல்லாம் மாணவர்களாகவே உழைத்தனர். மாணவர்க்கு யாதேனும் ஒரு வகையிலாவது உதவி புரியுங்காலே அவர்கட்கு மகிழ்ச்சியுண்டாவது வழக்கம். புத்தகங்கள்லிருந்து அறிவதினும் மிக்கதாகப் பெரியாரிடமிருந்து அறியக் கூடுமென்று புக்கர் கருதினார். ஆர்ம்ஸ்டிராங்கு