பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

ஏற்பாடு செய்துகொண்டு கோடை விடுமுறையிற் சிறிது ஊதியம் தேட வேண்டுமென்று புக்கருக்குத் தோன்றிற்று. அதனால், பணியை நாடிப் பல இடஞ் சென்றார். முடிவில், ஓர் உண்டிச் சாலையிற் கிடைத்த தொரு வேலையால் அவருக்குச் சோறுங் காசுங் கிடைத்தன. பள்ளிக்கூடத்தை வீட்டு ஆண்டின் இறுதியில் வரும்பொழுது அவர் பள்ளிக்கூடத்திற்குப் பதினாறு டாலர் கடன்பட்டிருந்தார். பள்ளியிலும் வேலைக்குத் தகுந்த கூலியேயாதலாலும், ஓராண்டு முழுதும் உணவுக்கு வேண்டிய அளவு அவர் வேலை செய்ய இயலாததாலும் அக்கடன் நின்றது. இப்பொழுது கிடைக்குங் கூலியினால் அக்கடனை அடைக்க எண்ணியிருந்தார் அவர். ஆனால், அதற்குப் போதிய அளவு கூலி கிட்டவில்லை. எனினும், உண்டிச்சாலையில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரத்திலும் இரவிலுமாக அவர் பாடங்களைப் படித்துக்கொண்டார். அவர் முடிக்க வேண்டும் என்று தொடங்கிய எதனையும் முடித்து விடக்கூடும் என்ற நம்பிக்கையோடே முயல்வதுண்டு. ஆதலால், கடனை அடைக்கப் போதிய பணம் கிட்டவில்லையே என அவர் சோர்ந்தாரல்லர். விடுமுறையின் இறுதி வாரத்திற் பள்ளிக்கூடப் பண்டாரத்தாரிடம் தமது நிலையைப் புக்கர் அறிவித்தார். அவரும், இயலுங்கால் அத்தொகையைக் கொடுக்குமாறு சொல்லி ஏற்றுக் கொண்டார்.