பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

கினார், அதுவே டஸ்கிகீயிற் பின்னாளிற் புக்கராற் செய்யப்படவிருக்கும் பெரிய தொண்டிற்கு வழிகாட்டி யாயிற்று. அப்பள்ளியின் மாணவர்களெல்லாம் பகலிற் பத்துமணி நேரம் கைத்தொழில் செய்ய வேண்டும் என்றும், இரவில் இரண்டு மணி நேரம் நூல் கற்பிக்கப்படு வர் என்றும் ஏற்படாயிற்று. அவர்களுடைய வேலைக்குக் கூலியாக உண்டிச் செலவுக்கு மேல் சிறிதளவு பணம் கொடுப்பதாகவும் ஏற்பாடாயிற்று. அந்தக் காசைப் பள்ளிக்கூடப் பண்டாரத்தில் வைத்திருந்தார்கள். தேர்ச்சியுற்றதும், பகற்பள்ளிக்கூடத்திற் சேருங்கால் உண்டிக்காக உதவும்பொருட்டே அது சேமித்து வைக்கப்பட்டது. முதற்கண் அப்பள்ளியிற் பன்னிருவரைச் சேர்த்தனர். சில வாரத்தில் இருபத்தைந்து பேர் படிக்கலாயினர். அவர்களெல்லாம் ஊக்கத்துடன் உழைத்துப் படித்து அவரவர் வாழ்க்கையிற் பின்னாளிற் சிறந்த மக்களானார்கள்.

1880-ஆம் ஆண்டில் பன்னிரு மாணவரே இருந்த அவ்விராப் பள்ளிக்கூடம் வளர்ந்து வளர்ந்து 1900-ஆம் ஆண்டில் ஏறத்தாழ முந்நூற்றைம்பது மாணவரைப் பெற்றுப் பயனளிப்பதாயிற்று. அப்பள்ளிக்கூடத்தின் ஆசிரியராக ஓராண்டு புக்கர் வாஷிங்குடன் அமர்ந்து, திறம்பட அடிப்படை கோலினார். இனி அவரது வாழ்க்கையின் அரிய தொண்டினை நோக்குவோம்.