பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. வாழ்க்கையின் அரிய தொண்டு

இராப் பள்ளிக்கூடத்து மாணவர்களையும் சிவப்பிந்தியச் சிறுவர்களையும் புக்கர் கவனித்து வருகின்ற நாளில் ஒரு நாள் ஆர்ம்ஸ்டிராங்கு அவரைப் பிறிதொரு வேலையை ஒப்புக்கொள்ள முடியுமா எனக் கேட்டார். அலபாமா (Alabama) என்ற மண்டலத்தில் டஸ்கிகி என்ற ஊரின்கண் நீகிரோவர்க்காக ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்த அரசாங்கத்தார் ஆண்டு ஒன்றுக்கு இரண் டாயிரம் டாலர் அளிக்க ஒப்புக்கொண்டிருந்தார்கள். அவ்வூரார் சிலர் ஆர்ம்ஸ்டிராங்குக்கு எழுதித் தங்களுக்குத் தகுந்த ஒரு வெள்ளையரை ஆசிரியராகும்பொருட்டுத் தெரிவிக்குமாறு கேட்டிருந்தார்கள். அவர்களது எண்ணம் நீகிரோவருள் அத்தகையளர் ஒருவர் அகப்படுவது அரிது என்பதேயாம். ஆர்ம்ஸ்டிராங்கு தக்க வெள்ளையர் ஒருவரை அறிந்திலர். ஆதலின், அவர் புக்கர் பெயரையும் பெருமையையும் குறிப்பீட்டு, அவரை அழைத்துக்கொள்ள விருப்பமா என அவ்வூராரைக் கேட்டார். அவர்களும் இணங்கித் தந்தி சொன்னார்கள்.

புக்கர் சின்னாளில் ஆண்டுப் போய்ச் சேர்ந்ததும் ஒர் ஏமாற்றம் அடைந்தார். பள்ளிக்கூடக் கட்டடம் ஒன்று இருக்குமென்றும், போனவுடன் பாடசாலை யைத் தொடங்க வேண்டுமென்றும் நினைத்துச் சென்ற