பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

57

இன்னும் இரண்டு மாதங்களில் இன்னும் இருநூற்றைம்பது டாலர் சேரவே, தோட்டத்திற்காகத் தவனைசொல்லியிருந்த பணமும் கொடுக்கப்பட்டது. நூறு ஏக்கராப் பரப்பு உள்ள அத்தோட்டம், இப்பொழுது பள்ளியின் உடைமை ஆயிற்று.

அடுத்தபடியாக, உழவுத் தொழில் நன்றாகக் கவனிக்கப்படலாயிற்று. மாணவருட்பலர் உழவுப் பகுதி களிலிருந்து வந்தவர்கள் ஆதலின், அவர்கள் ஊர் திரும்பியதும் புது முறையில் உழுது பயிரிட்டுச் சாகுபடி செய்யக்கூடுமென்று புக்கர் நம்பினார் , மற்ற மாணவர்க்கும் விவசாயம் சொல்லி வைப்பது நல்லதென்றே கருதினார். அதன் பின்னர்க் கைத்தொழிலிலும் மாணவர்களைப் பழக்கினார்.

பள்ளிக்கூடமோ, நாளுக்குநாள் பெருகிக்கொண்டு வருகிறது. இடமோ, போதிய அளவு இல்லை. நெடுநேரம் சூழ்ந்து, புக்கரும் பிறரும் ஒரு கட்டடத் திற்குத் திட்டம் போட்டுவிட்டார்கள். கட்டடம் ஆக அறுநூறு டாலர் செல்லும். திட்டம் போட்டிருக்குஞ் செய்தியைக் கேட்டவுடனே வெள்ளையர் ஒருவர் புக்கரிடம் வந்து, தாம் அக்கட்டடத்திற்கு வேண்டிய மரச்சாமான்களை உடனே தோட்டநிலத்திற் கொண்டு வந்து சேர்ப்பதாகவும், கிடைத்தவுடன்