பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் அரிய தொண்டு

59

வாக்களிக்கப்பட்டிருக்கிறது. காலையில் ஒரு டாலர்கூட புக்கர் கையில் இல்லை. ஆனால், அற்றைநாள் அஞ்சலில் நானூறு டாலருக்கு ஓர் உண்டியல் வந்தது. ஒலிவியா அம்மையார் பாஸ்டன் (Boston) பெண்மணிகள் இருவரிடமிருந்து அத்தொகையை வாங்கி அனுப்பியுள்ளார். அவ்விரண்டு பெண்மணிகளும் தங்கள் பெயரைத் தெரிவிக்காமலே பின்னரும் முடை ஏற்பட்ட காலத்திலெல்லாம் டஸ்கிகீப் பள்ளிக்கூடத்திற்குப் பேருதவி செய்து வந்தார்கள். முட்டுப்பாடுற்று வாடிய போதெல்லாம் வாட்டத்தைப் போக்கிய அவ் வள்ளியாரைப் போற்றாது யாரே இருப்பர்? அவர்கள் பதினான்கு ஆண்டு வரை ஆண்டுதோறும் ஆறாயிரம் டாலர் அனுப்பினார்களென்றால், அவர்களது - வண்மையை என்னென்பது!

கட்டடத்தின் அடிப்படைக்காக மாணவர்களால் நிலம் தோண்டப்பட்டது. மாலையில் மாணவரெல்லாம் அங்கு வேலை செய்யச் சில வாரத்தில் அடிப்படை போட்டாயிற்று. மூலைக்கல் ஈடவேண்டிய நாள் வந்தது. பல மக்கள் ஒன்று கூடி அந்நாளைக் கொண்டாடித் தத்தமக்கு இயன்றதைக் கொடுக்க முன் வந்தனர். வெள்ளையரம், நீகிரோவரும், ஆசிரியரும், மாணவரும், பெற்றோரும், மக்களும் வந்து நிற்ப, மூலைக்கல் நடப்பட்டது இதை நினைக்கும் பொழுது,