பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

நிற்பதன் அருமைக்கு அஞ்சி, மாணவருட்பலர் அவ்வேலையை வெறுத்தனர் : சிலர் பள்ளியை விட்டுச் சென்றனர். செங்கல்லிற்குரிய மண் தோன்றும் இடத்திற்காகப் பற்பல இடங்கள் நாடப்பட்டன. கடு வேலை செய்து இருபத்தையாயிரம் கற்களை அறுத்து அடைத்து நெருப்பு மூட்டினார்கள். சூளையைச் சுடுவதிற் பழக்கம் அவர்களுக்கு இல்லையாதலால், பயன் பெற்றாரல்லர். இரண்டாம் முறையும் சூளை பயன் தந்திலது. மூன்றாம் முறை வைக்கப்பட்டது, ஐந்தாறு நாள் எரிந்து திடீரென்று கீழே விழுந்தது. இம்முறை ஆயிரக்கணக்கான கல் கிடைப்பதில் ஐயமில்லை என நம்பியிருந்த அவர்களெல்லாம் ஏமாற்றமடைந்தனர். இனி, கையிற்காசில்லை. மாணவரோ, வேலை செய்ய விரும்புகிறாரில்லை. புக்கரோ, எடுத்த வேலையை முடித்துவிடுவது என்று உறுதி செய்துகொண்டுவிட்டார். தம்மிடம் ஒரு கைக்கடிகாரம் இருந்தது அவர் நினைவிற்கு வந்தது. அதை அடகு வைத்துப் பதினைந்து டாலர் வாங்கி வந்து ஆசிரியர் சிலருந் தாமும் முயன்று நான்காம் முறையாகக் காளவாய் போட்டார். இம்முறை வெற்றியே. இதன்பின் எத்துணையோ காளவாய்கள் போடப்பட்டன. அவையெல்லாம் வெற்றியே. அலபாமா மண்டலம் முழுதுமே அப்பள்ளிக்கூடச் சூளைகளின் கற்களை விரும்பி வாங்கும் காலம் சில ஆண்-