பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

மின்சாரம் முதலானவற்றைக் கைத்தொழிலிற் பயன்படுத்திக்கொள்ளுமாறு கற்பித்தார். இதை அறியா மக்கள் சிலர் எதிர்த்தாராக, அவர் ஊர் ஊராகச் சென்று கைத்தொழிற்கல்வியின் சிறப்பை எடுத்து இயம்பி வருவாராயினார் ; மாணவர்க்கும் பன்முறை பரிந்து கூறுவாராயினர் ; பத்தொன்பது ஆண்டுகட்குள் நாற்பது கட்டடங்கள் டஸ்கிகீக் கலாசாலைக்கெனக் கட்டப்பட்டவற்றுள் நான்கு நீங்கலாக ஏனையவெல்லாம் மாணவர்தம் உழைப்பால் எழுப்பப்பட்டன என்பதையும், ஆங்கு இப்பொழுது ஒரு கட்டடம் வேண்டுமானால், பிறருதவியின்றித் திட்டம் போடுவது முதல், கட்டி முடித்து மின்சாரக் கருவிகள் வைப்பது வரை ஆங்காங்குள்ள ஆசிரியர்களாலும் மாணவர்களாலுமே நிறைவேற்றக் கூடும் என்பதையும் அறிவோமாயின், அக்கலாசாலையின் மாண்பை அறிந்தோம் ஆவோம்.

1882-ஆம் ஆண்டில், புக்கரும் ஒலிவியா அம்மையும் வடக்கே சுற்றிப் புதுக் கட்டடத்திற்காகப் பொருளுதவி தேடுவாராயினர். போர்ட்டர் மண்டபத்தைக் கட்டி முடித்ததும், ராபர்ட்டு பெட்போர்டு (Rev. Robcrt Bedford} என்ற சான்றார் ஒருவரை அழைத்துச் சொற்பொழிவாற்றும்படி புக்கர் செய்தார். பின்னர், வாரன் லோகன் (Warren Logan) , என்பவர்