பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இன்னும் அத்தொண்டே

75


கிப் பின்னர்ப் பதினாயிரம் டாலர் கொடுத்தார். அப்பணம் டஸ்கிகீக் கலாசாலை தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் வந்து உதவிற்று. ஹண்டிங்குடன் (Collis P. Huntington) என்ற பெரியார் ஒருவர், முதற்கண் இரண்டு டாலரே கொடுத்தவர், பின்னர் ஐம்பதினாயிரம் டாலருக்கு மேலுங்கொடுத்து உதவினார்.

இதைப்போன்று பலவாறு பணம் வந்து சேர்ந்தது கலாசாலையின் நல்வேளையால் என்று நினைப்பது தவறு, என்றும், அழுக்கற்றுச் செய்து வந்த அரிய தொண்டினாற்றான் என்று நம்புவதே தகுதியென்றும் புக்கர் பன்முறை கூறி வந்ததுண்டு.

டஸ்கிகீயில், இடிந்து கிடந்த சந்தைக் கூடத்தில் மழை பெய்யுங்கால் மாணவனொருவன் குடை பிடிக்க, புக்கர் கற்பித்து வந்த காலம் போய், அழகான கட்டடத்தில் ஆசிரியர் பலர் அமைதியுடன் கற்பிக்குங் காலம் வந்துவிட்டது. உண்ணுங்கால், மழைத்துளி மேலே விழாவண்ணம் குடை பிடிக்கப்பட்ட காலம் ஒழிந்து, சிறந்த உண்டி நிலையம் நிறுவப்பட்டுவிட்டது. சொற்பொழிவு ஆற்ற வந்திருந்த டொனால்டு (Dr. Donald) என்ற பெரியார், மழையில் நனைந்துகொண்டே பேச வேண்டியிருந்த காலங்கழிந்து, பல்லாயிர டாலர் செலவில் இரண்டு பெண்மணிகள் உதவியாற் கட்டப்-