பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல் வன்மை

83

அங்குக் கேட்க வருவோருட் பெரும்பாலார் கல்விப் பொருளும் செல்வப் பொருளும் நிரம்பிய தென் வெள்ளையர் ஆவர் என்பதைப் புக்கர் உணர்ந்திருந்தார். அவர் தம்முள், சிலர் அவரை முன்னாளில் அடிமை கொண்டிருந்த ஆண்டாராகவும் இருந்திருத்தல் கூடும்.

பக்கர் செய்ய வேண்டிய பிரசங்கத்தை ஆழ்ந்து சிந்தித்து எழுதித் தம் மனைவியார்க்குக் காட்டினார். அவர் கேட்டு அவ்வாறே பேசலாம் என இசைந்தார். அட்லாண்டா செல்வதற்கு முதல் நாள் புக்கர் அச்சொற்பொழிவுக் குறிப்பை டஸ்கி ஆசிரியர்களுக்குப் படித்துக் காட்டினார். அவர்களும் அதனைப் போற்றினார்கள். பொருட்காட்சியின் நோக்கத்தை அறவே யொழித்து வெற்றியின்றிப் போகுமாறு ஒருவர் அந்நிலையில் பேசிவிடவுங் கூடும். ஆனால், புக்கர் இரு நிறத்தாரும் ஒத்து வாழ வேண்டிய முறைகளுக்குத் தடை நிகழா வண்ணம் தமது விரிவுரையை அமைத்துக்கொண்டார்.

1895 செப்டெம்பர் மாதம் 18-ஆம் தேதிதான் அச்சொற்பொழிவு ஆற்ற வேண்டிய, நாள். புக்கர் டஸ்கிகீயிலிருந்து 17-ஆம் தேதி புறப்பட்டார். உடனே மனைவியாரும், மக்கள் மூவருஞ் சென்றனர். புக்கர் புகைவண்டியிற் போய்க்கொண்டிருக்கும் பொழுது பல-