பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல் வன்மை

85

சாது செல்வதில்லை. பொருட்காட்சிச் சாலைக்குப் புக்கர் மற்றைப் பெரியாரோடு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலம் பிரசங்க மேடையை மூன்று மணிக்கப்பால் அடைந்தது, வெயிலின் கொடுமைக்கு இடையேயும், புழுக்கத்திற்கு இடையேயும், புறத்தே வேர்வையோடு புக்கர் மேடைமீது வந்து சேர்ந்தார். எள் விழ இடமிராமல் மக்கள் குழுமியிருந்தனர். மண்டபம் பெரிதாயினும், போதாதிருந்தமையாற் பலர் வெளியேயும் நின்றுகொண்டிருந்தனர். புக்கர் நுழைந்ததும் நீகிரோவரெல்லாரும் விண் பிளக்கும்படி கை தட்டி வரவேற்றார்கள். வெள்ளையரும் அரை மனத்தோடு கை தட்டினார்கள்.

கவர்னர் புல்லக்கு (Bullock) என்பவரால் முதற் கண் பொருட்காட்சி திறந்து வைக்கப்பட்டது. அவர் பேசிய பின் பெரியார் வேறு சிலரும் பேசினர். புக்கர் பேச எழுமுன், அவர் நீகிரோவருடைய துணிகர முயற்சி, நாகரிகம் ஆகியவற்றின் பிரதிநிதி எனக் கவர்னரால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்.

புக்கர் எழுந்து தமது நன்றியைக் கூறி விரிவுரை ஆற்றினார். நீகிரோவரும் வெள்ளையரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதைக் குறித்து அரிய முறையிற் சொல் சில இயம்பினர் : கைத்தொழில் வல்லானை