பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

இகழாது போற்ற வேண்டும் எனப் பகர்ந்தார் ; செய்யுளியற்றுதலுக்குள்ள பெருமை நிலத்தை உழுதலுக்கும் உண்டு என்றார். இசை நாடக அரங்கங்களில், ஒத்த இடம் பெற்றுக் காசைச்செலவிட உரிமை பெறுவதினும் சிறப்பாக, அவ்வேளையில் நீகிரோவர் தொழிற்சாலையில் தக்க கூலி கொடுக்கப் பெறுதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று விளம்பினார். பொருட்காட்சியில் வைத்துக் காட்டப்பெறும் பல்பொருட்டொகுதி பயக்கும் நன்மையிலும் பெரிதாகச் சாதி பேதத்தை ஒழித்தலும் வருக்க விரோதத்தை அகற்றலும் நலம் பயக்கும் என நவின்றார்.

புக்கர் பேசி முடிந்தவுடன் அவர் கையைக் குலுக்கிப் பலர் தத்தம் மகிழ்ச்சியைக் காட்டினர். கவர்னர் புல்லக்கு என்பவர்தாம் முதலில் அங்ஙனம் செய்தவர். அக்கட்டட மூலை முடுக்குகளிலெல்லாம் உவகையொ லியே எழுந்தது. பற்பலர் வந்து வந்து புக்கரைப் போற்றினர். அவர் மேடையை விட்டு வெளியே செல்வது அருஞ்செயல் ஆகிவிட்டது. மறுநாட்காலை டஸ் கிசுக்குப் புக்கர் புறப்பட்டார். அட்லாண்டா முதல் டஸ்கிக் வரையுள்ள புகை வண்டி நிலையங்களில் எல்லாம் அவருடன் கைகுலுக்க ஆவலுடையவராய்ப் பலர் வந்து நின்றனர்.

ஐக்கிய மாகாணப் பத்திரிகைகளெல்லாம் அவரது