பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல் வன்மை

87

பிரசங்கத்தை வெளியீட்டு, ஆசிரியப் பகுதிகளிற் போற்றி எழுதின. ஐக்கியமாகர்ணத்தின் தலைவரே அத்தேசத்தின் அரசர் போன்றவர். அவரும் புக்கரது பிரசங்கத்தைப் படித்துப் பார்த்து, அதனைப் போற்றிப் புக்கருக்குக் கடிதம் எழுதினார். கிளீவ்லண்டு (Mr. Cleveland) என்ற அத்தலைவரது நட்பை அது முதல் புக்கர் பெறுவாராயினார்.

பல பத்திரிகைகள் புக்கரைக் கட்டுரை வரைந்தருளுமாறு வேண்டின, பிரசங்கச் சபையார் பலர் புக்கரைப் பேசுமாறு அழைத்தனர். ஒரு பிரசங்கச் சபை புக்கருக்கு ஐம்பதினாயிரம் டாலர் அளிப்பதாகச் சொல்லி, குறிப்பிட்ட காலம் அதனொடு இருந்து அவர் பிரசங்கங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. அவரது வாழ்க்கைத் தொண்டு டஸ்கிகீக்கே என உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், அக்கலா சாலையின் முன்னேற்றத்திற்காகவும் நீகிரோ வருக்கத்தாரின் முன்னேற்றத்திற்காகவுமே தாம் பேசும் போதெல்லாம் பேசுவது என்று கருத்துக்கொண்டிருப்ப தாகவும், தமது பிரசங்கத்திற்கு வாணிக மதிப்பு மாத்திரம் வைக்கும் ஒப்பந்தம் எதற்குந் தாம் கட்டுப்பட முடியாது என்பதாகவும் தெரிவித்துவிட்டார்.

1897-ஆம் ஆண்டில், புக்கரை மற்றொரு மாபெருங்-