பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

கலாசாலை வேலைகளிற் பேருதவியாளராய் இருந்தவர். டஸ்கிகீப் பட்டணத்தில் தாய்மார் கூட்டங்கள் கூட்டியும், அதன் அருகே எட்டு மைல் தூரத்திலிருந்த ஒரு கூட்டத்தாருக்கு உழவுத் தொழில் கற்பித்தும் வந்தார் அவ்வம்மையார். கலாசாலையில், மகளிர் சங்கமொன்று ஏற்படுத்தி, மாதம் இரு முறை மகளிரெல்லாம் கூடிச் சிறந்த பொருள்களைக் குறித்து ஆலோசிக்க ஏற்பாடு செய்து வந்தார்.

போர்ஷியா என்ற மகளார் உடை செய்வதில் நல்ல பயிற்சி பெற்று, இசைக்கருவி. வல்லுநராகி, டஸ்கிகீயில் உபாத்திமைத் தொழிலை மேற்கொண்டார். பேக்கர் தெலியபெரோ (Baker Teliaferro) என்ற மூத்த மகன் சிற்ப வேலையில் தேர்ச்சியுற்றான். எர்நெஸ்டு டேவிட்சன் (Earnest Davidson) என்ற கடைசிப் புதல்வன் பள்ளிக்கூடத்தில் புத்தகக் கல்வியும் கைத்தொழிற்கல்வியும் பெற்றுக்கொண்டு வந்ததோ டமையாது, நாடோறுஞ் சிறிது காலம் பள்ளிக்கூட வைத்தியரோடு இருந்து வைத்தியத் தொழிலையும் கற்று வந்ததாக அறிகின்றோம். எனவே, புக்கருடைய மனைவி மக்களெல்லாம் புக்கரது வேலையில் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு பங்கு எடுத்துக்கொண்டனர் என்பது புலனாகும்.

1899-ஆம் ஆண்டில் புக்கருக்கு வியப்பினை