பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

95

விளைத்த செயலொன்று நிகழ்ந்தது. பாஸ்டன் ஊரிலிருந்து சிலர் ஏற்பாடு செய்து முடித்துக்கொண்டு, புக்கரை அவரது உடனலத்தின் பொருட்டு ஐரோப்பாவிற்குச் சென்று ஓய்வெடுத்து வருமாறு வற்புறுத்தி வேண்டினர். பாஸ்டனில் ஒரு கூட்டத்தில் அவர் பேசிய பொழுது மிகத் தளர்ச்சியுற்றிருந்தார் எனக் கண்டு, சில பெண்மணிகளும் கேரிசன் (Mr. Carrison) என்பவருஞ் சேர்ந்து பணந் திரட்டி அவரை ஐரோப்பாவிற்குச் சென்று வருமாறு வேண்டிக்கொண்டனர். வேண்டியதோடு நிறுத்தாமல், அவசியம் போய் வர வேண்டுமெனச் சொல்லிக் கப்பலில் இடமும் திட்டஞ் செய்துவிட்டார்கள். தாமில்லாவிட்டால் டஸ்கிகீயில் ஒருகால் பணமுடை ஏற்பட்டால் என்ன செய்வார்கள் எனப் புக்கர் நினைத்தார். ஆனால், ஹிக்கின்ஸன் (Higginson) முதலான சிலர் புக்கர் வரும் வரையில், டஸ்கிகீச் செலவுக்கு வேண்டிய பணத்தைச் சேகரித்து விட்டார்களெனப் புக்கர் அறிவிக்கப்பட்ட பின் அவர் தப்ப வழியில்லை.

ஆ ! அடிமையிற்பிறந்து, அறியாமையில் தவழ்ந்து, வறுமையில் வளர்ந்து, உண்ண உறங்க உடுக்க நலங்களின்றி முன்னர் வாடிய புக்கருக்கு வாழ்க்கை நலமெல்லாம் வெள்ளையருக்கே உரியன என்று தோன்றிய காலம் உண்டு. அக்காலத்திலெல்லாம், அவர் ஐரோப்பா,