பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துரை

எல். கணேசன்,பி.ஏ., பி.எல்.,

அவைத் தலைவர்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.


கடந்தகாலமின்றி நிகழ்காலம் இல்லை. நிகழ்காலமின்றி எதிர்காலம் இல்லை. எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிற யாரும், எந்தக் கட்சியும், எந்த நாடும், எந்த இனமும் நிகழ்காலத்தில் கால் ஊன்றி, கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து, எதிர்காலத்தை ஊடுருவி நோக்கித் திட்டமிட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு, தமிழ் இனத்திற்கு எதிர்கால முன்னேற்றத்திற்குத் திட்டமிடும் யாரும் இந்தவழி முறையைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். தமிழ்நாட்டின் கடந்த காலத்தை ஆய்வு செய்கிற நூல்கள் திராவிட இயக்கத்தில் தமிழர்களின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் அரும்பாடுபட்ட அறிவுலக மேதை அண்ணாவை ஆய்வு செய்வது தவிர்க்க முடியாதது.

திராவிட இயக்கத்தில் பலதுறைகளில், முனைகளில், சாதனைகள் புரிந்தவர் அண்ணா. 1937 தேர்தலில் தோற்று நிர்மூலமாகிப்போன அவ்வியக்கத்தை 30 ஆண்டுகள் இடைவிடாது போராடி 1967ல் அரியணையில் அமரச் செய்தார் அண்ணா. அறிஞர் அண்ணா பல்துறை அறிஞர் (Versatile), மேதை (Genius) என்பதை எனது ஆருயிர்ச் சகோதரர் தீர்மானக்குழுச் செயலாளர் குலோத்துங்கன் அவர்கள் நமக்கு இந்நூலில் விளக்குகிறார்.

நூலாசிரியர் குலோத்துங்கன் அவர்கள் திராவிடப் பேரியக்கத்தில் நீங்கா இடம் பெற்றவர். அறிஞர் அண்ணா அவர்களிடத்தில் அளப்பரிய அன்பு கொண்டவர். தொழிலாளர் இயக்கத்தில் நீங்கா ஈடுபாடு கொண்டவர். தொடர்ந்து பணியாற்றி வருபவர். எனவே அண்ணா