பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ♦ அறிஞர் அண்ணா



வேதனைப்பட்டது; 'அவர்களின் துயரைக் களைய வேண்டும்' என்ற எண்ணம் உதித்தது; அவனுக்கு ஓர் ஆராய்ச்சிக் கூடம் கிடையாது--அறிவு தரும் ஏடுகள் கிடையாது. அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டதே-- அய்ம்பது வயதான பிறகு தானாம்.

அவன் தொழில், தலைமயிர் வாங்குவது-சாயம் போடுவது--அதைத் தலைக்குச் சவுரிகளாக்கி விற்பது--இவைகள் தான்!

வறுமைதான் தோழன்! மனைவியோ அவன் மனமோ--கடிந்துரைப் பாள்! நூற்பவர்களின் கஷ்டத்தைப் போக்கி, உற்பத்தியின் அளவைப் பெருக்கவல்ல ஒரு நூதன் முறையைக் கண்டுபிடிக்கவேண்டும்' என்பதிலேயே சென்றது!

விதவிதமான பொம்மை இயந்திரங்கள் செய்வானாம்! வறுமையால் வாடிய மனைவி, இந்த வீண்வேலை செய்யும் கணவனிடம் சண்டையிடுவாளாம்! பொம்மைகளை உடைத்தெறிவாளாம்!

கந்தல் உடை! கண்கள், ஏதோ ஒரு வித பித்தம் அவனுக்கு இருப்பதைக் காட்டிற்று! கடைசியில் அவன் இயந்திரத்தைக் கண்டுபிடித்தான்.

(திராவிட நாடு இதழில் அண்ணா எழுதியது)


25. ஐக்கியம் பற்றி அண்ணா


உலக அரங்கில் மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக் கூடியதாகவும், தொழிலாளர் பிரச்சினை வளர்ந்துவிட்டது. நீதியையும் நேர்மையையும் சமுதாயத்தில் அமைதியையும் சுபிட்சத்தையும் விரும்பும் எவரும், தொழிலாளர் பிரச்சினைகளை அலட்சியப் படுத்திடவோ அல்லது அடக்கு முறையால் அழித்து விடக் கூடுமென்றோ எண்ண முடியாது. பிரச்சினை நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டும், புதுப்புது உருவங்களைக்