பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி . 83 காட்டிக் கொண்டும் இருக்குமே ஒழிய, தானாக மங்கி விடவும் செய்யாது; தாக்குதலால் தகர்ந்தும் போய் விடாது, பொது அறிவும் சனநாயக உணர்ச்சியும் வளர் வளர, பிரச்சினை பலம் பெற்றுக் கொண்டுதான் வரும். எனவே தொழிலாளர் ஸ்தாபனத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது பொறுப்புள்ள யாருக்கும் அவசியமானதாகி விட்டது. ஸ்தாபன ரீதியாக பிரச்சினைகளைக் கவனித்து முடிவு செய்யும் எண்ணமும் ஏற்படும் என்பதோடு இப்போது எங்கும் அது பரவி விட்டது. எந்த ஸ்தாபனமும் ஒற்றுமை உணர்வைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே, வலியுடன் விளங்கும்; பயன் விளையும். ஆகவே ஸ்தாபன ஐக்கியத்தை கவனித்தாக வேண்டும். ஸ்தாபனம் - அதாவது அமைப்பு பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொது இடம் - ஒரு பாசறை பாசறையிலே பலவிதமான போர்க் கருவிகளும் வீரர்களும் தேவை-கருவிகளின் எண்ணிக்கையும் வகையும் வளர்ந்து கொண்டு இருக்க வேண்டும். பாசறையின் உபயோகம் அதிகப்பட வேண்டுமானால் வாளை மட்டும் மலையெனக் குவித்து வைத்துக்கொண்டு, கேடயம் தேடாமல் இருப்பதோ, வில்லினைக் குன்றென குவித்துக் கொண்டு அம்புகள் இல்லாமலிருப்பதோ, துப்பாக்கிகளைக் கிடங்கில் குவித்து வைத்துக்கண்டு வெடி மருந்து போடாமலிருந்து விடுவதோ, இவை யாவும் ஒழுங்காகவும், தேவைக்கேற்ற அளவும் இருந்து, இவைகளைத் திறம் பட உபயோகிக்கும் ஆற்றல் உள்ள வீரர்கள் இல்லாம லிருப்பதோ, வீரர்கள் இருந்தும், இவர்களை நடத்திச் செல்லும் படைத்தலைவன் இல்லாதிருந்தாலோ, பாசறை இருந்து என்ன பயன்? அழகிய சிலை போல் இருக்குமே தவிர பயன் தரும் மனிதனாக இருக்க முடியாது. ஸ்தாபனம், ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகிறது. ஸ்தாபனம்