பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 * அறிஞர் அண்ணா கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படுகின்ற போது, அந்த ஸ்தாபனம் ஆற்றல் பெறுவதைப் பொறுத்தே அதனுடைய வளர்ச்சி இருக்கிறது. கொள்கைகள் ஏற்படுவதே, உள்ள குறைகளை தீர்த்து வைப்பதற்கேற்ப நிலைமைகளை மாற்றியமைப்பதற்கோ, புதியதோர் நலனைக் காண்பதற்கோதான். தொழிலாளர் களின் ஸ்தாபனம் சில அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், தொழிலாளர்களின் சில பல குறைபாடுகளை நீக்கிக் கொள்வதற்குத்தான். பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தொழில் முறை மாறிவிட்டது. உலகிலே, அதற்கு முன்பு எந்த நாட்டிலும் குடிசைத் தொழில் முறையும், தேவைக்காக மட்டும் பொருளை உற்பத்தி செய்து கொள்வது மட்டுமே இருந்து வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் போது, குடிசைத் தொழில் முறை மாறி, தொழிற்புரட்சி ஏற்பட்டு, இயந்திரத்தொழில் முறையும், ஒரு சிலர் பலரை வேலைக்கமர்த்தித் தொழில் நடத்தி, உற்பத்தியைப் பெருக்கி, பண்டங்களை விற்று, இலாபம் பெறுவதுமான முறை வளர்ந்ததும், இதனால் ஓரிடத்தில் ஏராளமானவர் கூடித் தொழில் செய்வதுமான முறையும், அந்தத் தொழிலில் தங்களுக்குக் கிடைக்கும் கூலி போக மீதமிருக்கும் இலாபப் பகுதி வேறிடம் போவதும், தொழிலாளர்களுக்கு விளங்கலாயிற்று. இந்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டதும், தொழிலாளர்கள் முதலில் தங்களின் விதி, வினை முதலாளிகளின் புண்ணியம், ஆகியவற்றைப் பற்றி எண்ணி, தங்கள் மனதிற்கு ஆறுதலைத் தேடிக் கொண்டதுடன், தாங்களும் பயபக்தியோடு நடந்து வந்தால், ஆண்டவனின் அருள் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். சிலர் காய்ந்த வயிற்றை வைத்துக் கொண்டு கடமையுணர்ச்சியுடன் பாடுபடுவதையும் எடுத்துக்காட்டி, தொழில் அமைத்தவர்களின் நல்லுணர்ச்சிக்கும், தயாள குணத்திற்கும் மனுப்போட்டு,