பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ♦ அறிஞர் அண்ணா



ஏழைக்கு இரங்காதவனும் ஒரு மனிதனா?
அவன் மனம் கல்லா இரும்பா?
கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்காதா?


என்று மாறி

இப்போது முடியாதாம்!
இலாபம் இல்லையாம் முன்போல்


என்று பேச்சு மறுபடியும் மாறி,

நமது உழைப்பினால் கொழுத்தான்;
இலாபம் மலைபோலக் குவிந்திருக்கிறது;
நாம் வாடுகிறோம் வறுமையால்; அவன்
அரச போகத்தில் இருக்கிறான்;
நமது உழைப்பு தரும் இலாபத்தால் தானே
அவனுடைய நிலை கோடீஸ்வரன்
என்று கூறும்படி இருக்கிறது.


என்று பேச்சு கொஞ்சம் முடுக்காகி விட்டது.

கந்தன் கேட்டானாம் கால் ரூபாயாவது அதிகம் தேவை. கூலியைக் கொஞ்சம் உயர்த்துங்கள் என்று; முடியாது என்று சொல்லி விட்டாராம்.

முத்தன் பேசச் சென்றானாம். முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு, 'எதுவும் முடியாது போ' என்று சொன்னாராம்.

முனியன் உள்ளே நுழைந்த போது, நாயை அவன் மீது ஏவினார்களாம் என்று உரையாடல் வளர்ந்து கடைசியில் கந்தனும், முத்தனும், முனியனும், காத்தனும், இப்படி நாம் தனித்தனியே, நமது குறைகளை எடுத்துக் கூறிப் பரிகாரம் தேடிப் பயனில்லை; தனித்தனியே போய்ப் பேசியும் பயனில்லை. மொத்தத்திலே பரிகாரம் தேடவேண்டும். அதுதான் சரியான வழி என்று முடிவு செய்தனர்; ஸ்தாபனங்கள் தோன்றின.