பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அறிஞர் அண்ணா குடும்பம் முதற்கொண்டு கோலோச்சும் சர்க்கார் வரையிலே, ஸ்தாபனங்கள்தான்-ஒருவகைப் பொதுத் தன்மை -- பொதுவாக பணிகள் - அனைவரையும் கட்டுப் படுத்தும் பொதுவான பொறுப்புகள், பலன்கள் ஒரு இவைகளில் உண்டு. இதிலே ஏது கெடினும் ஸ்தாபனத்தின் ஐக்கியம் நிச்சயம் கெட்டுவிடும்-அண்ணன் அறியாதபடி தம்பி செலவிடும் பத்து ரூபாய் - அண்ணன் தம்பி என்ற பாசத்தால், சில நாட்களுக்குக் குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காமலிருக்கும்- ஆனால் சில காலத்துக்குத்தான்- எப்போதுமல்ல. தம்பியின் பழக்கமே அண்ணன் அறியா வண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகி விட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த, எத்தனை விதமான பந்த பாசம் பேசியும்; பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனை யும் துணைக்கு அழைத்தும் முடியாததாகி விடும்-குடும்பம் பிளவுறும்; பிரியும் - அண்ணன் தம்பிக்குள்ளாக குடும்பத்திலேயே இந்த நிலையென்றால், ஸ்தாபனத்தின் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும், ஸ்தாபனத்தின் மற்ற ஐக்கிய உறுப்பினர்களுக்குமிடையே கடைசி வரையில் பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையாதபடி பார்த்துக் கொள்ள முடியாது. அமைப்புகளின் ஒற்றுமை அதனைச் சார்ந்தவர் அனைவரும் ஒரே நோக்கம் கொண்டு ஒரே வகையாகக் குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாடுபடுபவர் என்பதைத்தான். பொறுத்திருக்கிறது. இந்த ஒற்றுமையும், போலியானதாக இருக்கக் கூடாது. இருப்பின் மிக மிக சாதாரணச் சங்கமும் ஸ்தாபனத்துக்குப் பெரியதோர் இடையூறாகி விடும். ஒரு ஸ்தாபனம் ஏற்படச் செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்திற்கு, அதற்கான திறமை