பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி. * 89 வாய்ந்த கட்டடக்காரர் தேவைப்படுவது போலச் சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்கத் திறமையும் உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை. அந்த அமைப்பாளருக்கு நாம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொள்வது என்று கண்டறியும் திறனும், கட்டுக்கோப்பு முறையிலே ஸ்தாபனம் இருக்க வேண்டும் என்ற நோக்கமும் நிச்சயமாகத் தேவை, வலிவுள்ள இரும்பு காடர்களும் வகை வகையான மரச்சாமான்களும், உயர்ந்த ரக சிமிட்டியும், அழகான பித்தளைக் குமிழ்களும், அரைத்தெடுத்த சுண்ணாம்புக் குழையலும் தேவை. ஆனால் இவைகளை எங்கெங்கு, எந்தெந்த முறையில் உபயோகித்தால் கட்டடத்தின் கட்டுக் கோப்பு சிறந்த முறையிலும் இருக்கும் என்பதை அறிந்து அமைக்கும் அமைப்பாளர்கள் தேவை- கட்டுக் கோப்பு கெடாதபடி பார்த்துக் கொள்ளும் திறம் அவர்களுக்கு இருக்க வேண்டும்- அக்கறையும் இருக்க வேண்டும். பெரியதோர் மாளிகையில், ஒரு சிறிய ஜன்னல் அவ்வளவு முக்கியமானதல்ல-அந்த ஜன்னல் இல்லாமற் போனாலும், மாளிகை இருக்கத்தான் செய்யும். அடிப் படையும் குறுக்குச் சுவரும், மேல் அமைப்பும் சரியாக இருக்குமட்டும், ஜன்னல் இருந்தாலும், எடுபட்டாலும், கெட்டாலும், மாளிகைக்கு ஒரு சேதமுமில்லை. ஆனாலும் மாளிகையிலே அக்கறை உள்ளவர்கள் அந்தச் சிறு ஜன்னலைக் கூடத்தான் கவனித்துக் கொள்வார்கள் கெடாதபடி. ஜன்னலை மட்டுமல்ல, அதன் கம்பிகளிலே ஒன்று கெட்டாலும், கவலைப்படுவர். ஏனெனில், ஜன்னலின் கம்பி கெட்டு, பிறகு அது எடுபட்டு, அதன் பலனாக ஜன்னல் கெட்டு, கள்ளனோ காற்று மழையோ உள்ளே புகுந்து, அதன் விளைவாக மாளிகைக்கு கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு விடக்கூடுமே என்ற யூகம், மாளிகைக் காரருக்கு இருக்கும். எனவே அவர் ஜன்னலின் கம்பி மாளிகையின் அடிப்படை அல்ல என்ற போதிலும்,