பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அறிஞர் அண்ணா பட்டுக்கொண்டு, இனிக் கவலை இல்லை என்று இருந்து விடக் கூடிய சம்பவமல்ல- எப்போதும் விழிப்போடு இருந்து கொண்டு, அவ்வப்போது பழுது பார்த்துக் கொண்டு எந்தச் சமயத்திலும் மூலக்கருத்து கெடாதபடியும் கவனித்துக்கொண்டு இருந்தால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஓர் அற்புத ஜீவசக்தி, ஸ்தாபனத்தின் பலமும் பயனும், அந்த ஐக்கியம் - ஒற்றுமை உணர்ச்சியைப் பொறுத்தே இருக்கிறது. வீணை உயர் தரமானதுதான்; வித்வானும் தேர்ந்தவர்தான். ஆனால் ஒரு நரம்பு மட்டும் ஓரிடத்தில் தளர்ந்து இருக்கிறது என்றால், வீணையின் நாதமும் கெடும்; வித்வானின் இசையும் பாழ்படும். ஸ்தாபனத்தின் ஐக்கியம் சங்கீதத்துக்கு உள்ள சுருதி மானத்தைப் போன்றது - மிகமிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். 26. நாடு வாழ்ந்திட பொது நலம் மலர்ந்திடத் தொண்டாற்ற வாரீர்! நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது, தமிழ்நாட்டில் - வழிவழி வந்த வல்லவர் களும், வித்தகர்களும் நிரம்பிய தமிழ் நாட்டில்-காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளும், அருவிகளும் பண் பாடி வளமளித்திடும் தமிழ் நாட்டில் ஆயிரம் தொழில்களில் ஈடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தை ஈட்டித்தரும் பாட்டாளிகள் நிரம்பிய தமிழ் நாட்டில் பாட்டு மொழியாம் தமிழ் மொழியுடன் இழைந்துள்ள பண்பாடு சிறந்திடும் தமிழ் நாட்டில்-'பாருக்குள்ளே நல்ல நாடு' என்று பாவலர் கொண்டாடிடும் தமிழ் நாட்டில்- அதனை எண்ண எண்ண இனிக்கிறது; ஆனால்...ஆமாம்; அந்தக் கவலை தந்திடும் சொல் வரத்தான் செய்கிறது! 'எத்தனை எத்தனை சிக்கலுள்ள பிரச்சினைகள் மலிந்துள்ள தமிழ்நாடு' என்பதனை எண்ணும் போது கவலை ஏற்படுகிறது!