பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி . 93 இந்தப் பிரச்சினைகளைச் சிந்திக்கவும், சிக்கல் களைத் தீர்க்கவும் போதுமான உறுதியும் திறமையும் துணையும் தோழமையும் தொடர்ந்து கிடைத்திட வேண்டுமே" என்பதனை எண்ணும்போது, 'நீங்கள் உடனிருக்கிறீர்கள்' என்ற நினைவுதான் கவலையை ஓட்டுகிறது- கடமையைச் செய்வோம் என்ற உறுதியைத் தருகிறது! அரசு நடத்திட ஆயிரமாயிரம் திறமைமிகு அறிவாளர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது; ஆட்சி, உண்மையில் செம்மையானதாக அமைந்திட வேண்டு மென்றால், வயலில் - தொழிற்சாலையில்-- அங்காடியில்- பணிபுரிந்திடும் உற்பத்தியாளர்கள், உழைப்பாளர்கள் அனைவரும், "ஆட்சி நடத்திடுவோர் நாமே" என்ற உணர்வுடன் தத்தமது கட்மையினைச் செய்ய வேண்டும். கற்றறிவாளர்- எம்மை நல்வழி நடத்திச் செல்ல வேண்டும்; இதழ் நடத்துவோர்-உடனிருந்து முறை கூறிட வேண்டும்; இவர் யாவரும் சேர்ந்து நடத்திடுவதே அரசு- நாங்கள் உங்களால் அமர்த்தப்பட்டவர்கள். வயல்களிலே கதிர் குலுங்கிடின்-அரசு அலுவலகங் களில் மகிழ்ச்சி துள்ளும்! தொழிற்சாலைகளிலே தோழமை மலர்ந்து, நீதியும், நிம்மதியும் கிடைத்து, உற்பத்தி பெருகிடின் - நாட்டு நிலை உயர்ந்திடும்! அங்காடியிலுள்ளோர், 'கொள்வன -- கொடுப்பன் என்பவை நேர்மையின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்" என்று இருந்திடின்-அகவிலையும், பதுக்கலும் அழிந்துபடும்! பொதுமக்கள் வாழ்வு சீர்படும். "நாட்டின் நிலை உயர்ந்திடப் பணியாற்றிடவே நாம்" என்ற உணர்வுடன் மாணவ மணிகள் கல்விக்கூடங்களில் பயிற்சி பெற்றிடின்-நாடு மேம்பாடு அடையும்.