பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி97. 28. அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் உண்மையிலேயே விரும்பத்தக்கதா? அரசியலுக்கு இவ்வளவு முக்கியத்துவம். இந்த நாட்டிலே கொடுக்கப்படுவது உண்மையிலேயே விரும்பத் தக்கது கூட அல்ல; இன்றைக்கு மக்கள் கண்முன்னால் யார் தெரிகிறார்கள் என்றால், அரசியல்வாதிகள்தான் தெரிகிறார்கள்; எழுத்தாளர்கள் தெரிவதில்லை விஞ்ஞானிகள் தெரிவதில்லை கட்டடக் கலைஞர்கள் தெரிவதில்லை மருத்துவர்கள் தெரிவதில்லை பொறியியல் வல்லுனர்கள் தெரிவதில்லை. ஆனால், அரசியலில் இடம் பிடித்துக் கொண்டவர்கள் இடம் பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் மக்கள் கண்முன்னால் தெரிகின்றார்கள். அளவுக்கு - - பிற நாடுகளிலே விஞ்ஞானிகளைப் பாராட்டுகின்ற பொறியியல் வல்லுனர்களைப் பாராட்டுகின்ற அளவுக்கு நம்முடைய நாட்டிலேயும் பாராட்டப்பட வேண்டுமானால், "அரசியல்தான். முழுக்க முழுக்க மக்கள் கவனத்தை ஈர்க்கின்ற துறை" என்பது நீக்கப்பட்டாக வேண்டும். ஏனென்றால், நம்முடைய நாட்டினுடைய நிரந்தரமான செல்வம், அரசியலில் உள்ளவர்களால் மட்டுமே அளிக்கப்படுவதில்லை. ஏர் பிடித்து உழுகின்றவன் நிலத்திலிருந்து செல்வத்தை எடுத்துத் தருகின்றான்; ஆசிரியர்கள் அறிவுச் செல்வத்தை அளிக்கின்றார்கள்; நோய் நொடிகளை நீக்குகின்ற வல்லவர்கள் மருத்துவத்துறையில் இருக்கின் றார்கள்: காட்டாற்றைக் கட்டுப்படுத்தி கரம்புகளைக் 'கழனிகளாக்கத் துணைபுரிகின்ற பொறியியல் வல்லுனர்கள் இருக்கின்றார்கள். இவ்வாறு நிரந்தரச் செல்வத்தைத் தருகின்றவர்கள், மக்கள் முன்னால் அதிகமாகத் 2.8.