பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அறிஞர் அண்ணா அரியாமல் நானும் கருத்திருமனும் மக்கள் முன்னாலே தெரிந்து கொண்டிருப்போமேயானால் அரசியல்வாதிகள் மட்டும் மக்கள் முன்னாலே தெரிந்து கொண்டிருப்போ மானால், அரசியலில் வேகம் இருக்கலாம் அரசியலில் விருப்பு வெறுப்பு காணலாம் ஆனால், நாட்டு முன்னேற்றத்தில் நிச்சயம் தயக்கம் ஏற்படும். ஆகையினால்தான், பஞ்சாயத்துக்களிலே பஞ்சாயத்து யூனியன்களிலே பணியாற்றுகின்ற நீங்கள், வெறும் அரசியல்வாதிகளாக உங்களை ஆக்கிக் கொள்ளா மல் கருதிக் கொள்ளாமல் நாட்டுக்கு நிரந்தரச் செல்வத்தைத் தேடிக் கொடுக்கக் கூடியவர்களாக உங்களைக் கருதிக் கொண்டு, அந்த முறையில் பணியாற்று வீர்களேயானால் -- இந்த நாட்டின் முன்னேற்றத்தை வெகு எளிதாகவும், வெகு விரைவாகவும் நாம் பெற்று அளிக்க முடியும். (அறிஞர் அண்ணா: ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மாநாட்டில்: 1969ல்.) 29. போர்குறித்து புகழ்ப்பாட்டு கொலு இருக்கும் கோவை அல்ல! என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுகிறார். போர் குறித்த புகழ்ப்பாட்டு என்றால், கொலு இருக்கும் மன்னனை பற்றித்தான் மற்றவர்கள் பாடியிருக்கிறார்கள்.- இது நாள்வரை,நான் அப்படி அல்ல! குடிமகனாய் உள்ளோன் ஊர்சுற்றும் உழைப்பாளி தோள்குத்தும் முட்கள் நிறை மூட்டைதனைச் சுமப்போன், தாங்கொணாப் பாரந்தனைத் தூக்கித் தத்தளிப்போன்