பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 99 களத்தில் பணிபுரிவோன் உலைக்கூடத்து உழல்வோன். ஏதோ இசை எழுப்பி அதனால் இனிமைபெற எண்ணுபவன் ஏரடிப்போன் ! தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண்கொண்டான். இவர்களைப் பற்றி நான் பாடுவேன் என்கிறார். இனி மேலா பாடவேண்டும்; இதோ பாடியே விட்டாரே, தூக்கம் தொட்டிழுக்கும் துயர் கக்கும் கண்கொண்டான் என்ற வரிகள் அந்த ஏழையின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறதே! மேஸ்பீல்டுடைய இதயந் தன்னில் எவரெவர் இடம்பெற்றுள்ளார் என்பது விளக்க மாகிறதே. இந்தக் கனிவு, மற்றவர்களால் புறக்கணிக்கப் பட்டுப்போன ஏழை எளியோர்க்காக, உழைத்து உருக்குலைந்தோருக்காக! ஏழையிடம் இந்தக் கனிவு காட்டாத கவிவாணர்களை அலட்சியமாகக் கருதுகிறார்; ஒதுக்கித் தள்ளுகிறார்; என்று மற்றவர் பாடட்டும் மகிழ்ச்சி தரும் மாடு மது குறித்து ! இடிதுரைக்கிறார். செல்வவானைப் பற்றி அவனுடைய சிங்கார வாழ்வு பற்றி, அவன் மந்தகாசம் பற்றி, அவன் மாளிகையிலுள்ள மதுவகை பற்றிப் பாடுகிறார்களே அவர்களைக் குறித்து மேல்பீல்டுவுக்கு அத்துணை எரிச்சல். அவர்கள் பாடட்டும் அவை பற்றி என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்.