பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலை - உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 101 இருக்கவேண்டும்; வேலை நேரத்தை மட்டுமல்ல நான் மனிதத்தன்மையை மயக்காத அளவு குறிப்பிடுவது; வேலை முறை - தன்மை வேலை செய்பவனுக்கு வேலை நேரத்தில் வேலைக்குத் தேவையான வசதிகளைத் தருவது எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்! பாட்டாளிகள் ஆலைத் தொழிலிலே ஈடுபட்டுச் சங்கம் அமைத்துக்கொண்டு கூலி உயர்வு, குடியிருக்க வீட்டு வசதி, சுகாதார வசதிகள் ஆகியவைகளுக்காகக் கிளர்ச்சிகள் நடத்துபவர்கள் மட்டுமல்ல! பண்ணை வேலை செய்பவன், கல் உடைப்பவன், கட்டை வெட்டுபவன், குப்பை கூட்டுபவன் போன்றவர்களின் சங்கமோ, கிளர்ச்சி செய்யும் உணர்ச்சியைக் கூடப் பெறாமல் சிதறி, வாழ்க்கையைச் சிதைத்துக் கொண்டுள்ள கோடிக்கணக்கான தொழிலாளரையே குறிப்பதாகும்! "இது என்ன முறை, ஐயா; காலமெல்லாம் உழைக்கும் என்னை வறுமை விரட்டுகிறது; ஊரை மிரட்டி வாழும் உமக்கோ; போக பாக்கியம் ஏராளமாக இருக்கிறது; இது நியாயமா?" என்று ஏழை, சீமானைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்விதான், புரட்சியின் ஆரம்ப அத்தியாயம் முதலாளித்துவ முறை இது ! பால் தரும் வரையில் பசு தொழுவத்தில் இருக்கிறது; பால் தருவது தீர்ந்ததும் கிராமத்திற்குத் துரத்தப்படுகிறது! அதுபோலத்தான், முதலாளித்துவ முறை - இலாபம் கிடைக்கும் வரையில் தொழிலாளருக்கு வேலை தரும்; இலாபம் இல்லையேல், 'வேலையில்லை; என்று கறிவிடும். வறுமை எப்படி ஒழியும் ? பண்ணை முதலாளி உழைக்க வராமலும், கூலி விவசாயி நிலமற்று இருந்தாலும் விவசாயம் செழிக்காது; கிராமப்புறம் வளமாக இராது; வறுமை ஒழியாது!