பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அறிஞர் அண்ணா இருந்தாலும், எவ்வளவு சீக்கிரமாக உயர்ந்தார்களோ அதைவிட வேகமாகக் கீழே இறங்கி விடுவார்கள்! 'மக்கள் குரல்தான் மகேசன் குரல்' என்பது, ஜூலியஸ் சீசர் காலந்தொட்டு இன்று வரை இருக்கும் நியதியாகும். எனவே, மக்களிடத்தில் உங்களுடைய குறைகளை வைப்பதற்கு இந்தக் கூட்டம் முதல்படியாக இருக்க வேண்டுமென்று கருதுகிறேன். நீங்கள் எல்லாத் தந்திரங்களும் தெரிந்த ஒரு பெரிய சர்க்காரை எதிர்த்துப் போராடப் போகிறீர்கள்; மொரார்ஜி தேசாய்க்கு ஒரே ஒரு மொழியில் சொன்னால்தான் புரியும் அதுதான், 'பலாத்கார மொழி!' இதை நாம் பம்பாய், ஆமதாபாத் போன்ற இடங்களில் பார்த்திருக்கிறோம்! ஆகவே, உங்கள் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு உண்டு; அதைப்போல, எல்லா அரசியல் கட்சிகளும் கட்டாயம் ஆதரிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.' மத்திய அரசு ஊழியர் 'கோரிக்கை நாள்' பொதுக் கூட்டத்தில் (25-5-60) அண்ணா ஆற்றிய உரை. தொழிலாளி வாழ்வில் மறுமலர்ச்சி ஒரு சிலர் ஓயாது உழைத்து சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல் புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிந்து - பட்ட மரம் துளிர் விடும் வகையில் பாடுபட்டு - வெற்றி கண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்! - தொழிலாளி வெறும் உழைப்பாளியாக மட்டுமே இருக்கும் நிலை மாறி, தொழிற்சாலைகளிலே அவன் பங்காளியுமாக்கப்பட்டால், விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.