பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi


ஈடுபடுத்திக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பகால இளம்வயதில் தொழிற்சங்கத்தில் ஈடுபட்டு, அரசியலுக்கு வந்தவர். அண்ணா ஒரு சகாப்தம். உழைக்கும் மக்களுக்கு உரிமை வேண்டும்; உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்; தேவைக்கேற்ப பங்கீடு வேண்டும்; ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஆண்டான் அடிமை, என்றில்லாமல் அனைவருக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சமவாய்ப்புத் தர வேண்டும் என்ற உரிமைகள் அண்ணாவின் இதயத்தில் இருந்து ஏற்பட்டவை. இவற்றைத் தம் பேச்சின் வாயிலாக உணர்த்தியிருக்கின்றார்.

பெரியார் சொன்னார், சமுதாய இழிவைப்போக்க சாதி, மதங்களற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்று. பொதுவுடமைத் தத்துவத்தைக் கண்ட காரல் மார்க்ஸ் வர்க்க பேதம் அற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார். ஆனால் அண்ணா, ஏழை பணக்காரன் என்ற பேதம் நீங்கினால் போதாது, சமுதாய ஏற்றத் தாழ்வுகளும் ஒழிய வேண்டும் என்றார். ஆகவே அண்ணா சொன்ன தத்துவம் சாதியற்ற, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆகவே அண்ணா ஒரு சமூகப் புரட்சியாளர், அவருடைய தொழிற்சங்கத் தொண்டுகளை இந்நூலின் வாயிலாக இக்கால இளைஞர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. நண்பர் குலோத்துங்கனின் முயற்சி மிகச் சிறப்பாக வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

இந்நூலைச் சிறப்பாக வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் பதிப்புச்செம்மல் பேராசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களைப் பாராட்டுகிறேன்.