பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை

பேனா எனது போர்வாள்!
புத்தகம் எனது கேடயம்!
பாடுபட்டவன் உடம்பிலே சேறு இருக்கிறது!
பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கிறது!
இது நியாயமா?

என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உழைப்பாளர்களுக்காகச் சிந்தனையைத் தூண்டும் வினா எழுப்பினார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சு--எழுத்து மூச்சு--வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்தும் தமிழ்ச் சமுதாயத்திற்கு என்றென்றும் பயன்தரத்தக்கவை.

அண்ணா அவர்களின் நாவசைவுக்கு இந்த நாடே அசைந்தது! அவருடைய பேனாமுனையினால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியது. வரலாற்றில் ஒரு திருப்பு முறையை ஏற்படுத்தியது.

உழைப்பாளி--தொழிலாளி--பாட்டாளி மக்களுக்காக அண்ணா அவர்கள் வழங்கிய கருத்துரைகளையும், கட்டுரைகளையும் இன்றைய இளம்தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் கருதி, இலட்சிய நோக்கோடு உழைப்பாளர்களுக்கு உதவும் இந்நூலைத் தொகுத்து வழங்கியுள்ளேன்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி, வரலாறு படைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், அண்ணாவின் கொள்கைக் குன்றுவைகோ அவர்களுக்கு என்றும் நன்றிக்கடப்பாடுடையேன்.