பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 13



கொள்ளையடிக்கப்படுகிறதோ--உணர்வு சிதைக்கப்படுகிறதோ--உயர்நிலை வீழ்த்தப்படுகிறதோ அங்கெல்லாம் மே தினம் போராட்டங்களின் ஆரம்ப நாளாகவே கருதப்படுகிறது. சமூக-அரசியல்--பொருளாதாரத் துறைகளில் ஒடுக்கப்பட்டு, இலையுதிர்ந்த மரமாக நிற்கும் தேய்ந்த திராவிடத்தில் மே தினம் கொடுமைகளைக் களைய நாம் எடுக்கும் கொடுவாளாகக் காட்சியளிக்கிறது. (1-5-54 'மன்றம்)


3. மே நாள் விழா!

"மே நாள் விழா உலகெங்கும் கொண்டாடப்படுகின்ற விழாவாகும்! இந்த விழா, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ, ஒரு மதத்தினருக்கோ உரியதல்ல! உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எந்தவிதப் பாகுபாடுமின்றிக் கொண்டாடி வருவதாகும்..

எங்கெங்கே நியாயம் நிலைத்திருக்கிறதோ அங்கெல்லாம்--எங்கெங்கே மாற்றாருக்குப் பரிந்து பேசுபவர்கள் உள்ளனரோ அங்கெல்லாம்-இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது!

உலகில், தொழிலாளர் ஆட்சி எங்கே நிலவி இருக்கிறதோ அங்கெல்லாம்--மே நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!

அத்தகைய ஒரு புனித இலட்சியத்திற்காக தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட நாளாகும் இது

4. மே நாளின் குறிக்கோள்!

"சக்திக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற வசதி," என்ற முறையை மனித சமுதாய வாழ்க்கைக்கேற்ற நிரந்தரத்