பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ♦ அறிஞர் அண்ணா



திட்டமாக எடுத்துக்கொள்ளும் முயற்சி எளிதில் முடிவதாக அமைய வேண்டும். அந்தக் குறிக்கோளை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஓர் ஒப்பற்ற நாளாகவே 'மே நாள்' கொண்டாடப்படுகிறது!

"புதியதோர் உலகம் செய்வோம்--கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்ற பெரு முழக்கம், உலகத் தொழிலாளர்களின் உள்ளங்களிலிருந்து இன்று வெளிக் கிளம்பட்டும்! அதனால் ஏற்படும் மகிழ்ச்சி எங்கும் மலரட்டும் அந்த மலரினின்றும் வீசும் இன்ப மணம் எங்கும் கமழட்டும்!

5.பண்டிகை அல்ல — திருநாள்

அறுவடைத் திருநாளாக--உழைப்பின் பயனை உணர்த்தும் திருநாளாக இருக்கும் பொங்கல் திருநாள், தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான 'தமிழ்த் திருநாள்' ஆகும்!

'திருநாள்' என்றால் என்ன? பொருள் புரியாமல் பயன்படுத்தப்படும் பல சொற்களில் ஒன்றாகத் 'திருநாள்' இருக்கிறது.

'திரு நாள்' என்பது-மகிழ்ச்சி தருவது; 'அவனுக்கென்ன நாளெல்லாம் திரு நாள்' என்று கஷ்டப்படுகிறவன் சொல்லக் கேட்கிறோம்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? மகிழ்ச்சிப் பயனைத் தருவதுதான் திருநாள்! மகிழ்ச்சி வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை!

திருநாளைக் காரணமாகக் காட்டி, 'என் காலில் விழு; நூறு பேருக்குச் சோறு போடு' என்றெல்லாம் கூறுவது திருநாள் ஆகாது-அது, பண்டிகை!