பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 15



தீபாவளிப் பண்டிகை--கார்த்திகைப் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை சிவராத்திரிப் பண்டிகை--அப்படிப் பல பண்டிகைகள் இருக்கின்றன!

இப்படி நடந்தால் இது கிடைக்கும்' என்று கூறுபவை இந்தப் பண்டிகைகள்!

பழந் தமிழர்கள், அறத்தினை வியாபாரம் செய்யவில்லை! 'இங்கே கொடுத்தால்--அங்கே கிடைக்கும்' என்ற முறையில் நடந்து கொள்ளவில்லை!

"இம்மைக்குச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆய்அலன்"

என்பது பழந் தமிழர் போக்கைக் காட்டும் பாடலாகும். எங்கோ--எதுவோ கிடைக்கும்' என்பதற்காக இங்கே இதனைக் கொடுப்போம்' என்ற நிலை அன்றில்லை!

இதைச் செய்தோம்-இது கிடைத்தது' என்று தெரிய வேண்டும்--இது தான் திருநாளாகும்!

பொங்கல் திருநாளையே தமிழர் திருநாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.

முதலில் பொங்கல் திருநாள் தமிழ் மக்களுக்குப் பொதுவான திருநாள் என்று பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் குறிப்பிட்டார்; அவர், மாநிலக் கல்லூரிப் பேராசிரியராக அப்போது இருந்தார்

கொள்கையிலே மறுமலர்ச்சி கண்ட தி. மு. கழகத் தோழர்கள் இதனை ஒன்றுபடும் திருநாளாகக் கொண்டனர் !

இந்தப் பொங்கல் திருநாள் இப்போது தமிழர் திருநாளாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது--எல்லா மதத்தினரும் இதில் கலந்து கொள்கின்றனர்?