பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ♦ அறிஞர் அண்ணா



'இது முஸ்லிம் திருநாளல்ல' என்று கூறப்படுகிறது; அவர்கள் மதத்தால்--மார்க்கத்தால் என்றாலும் மொழியால் தமிழர்கள்! இஸ்லாமியர்

இன்னும் சொல்லப் போனால் தமிழகத்திலுள்ள திருநெல்வேலிச் சீமையில் முஸ்லிம்களும் மற்றவர்களும் 'மாமா' மைத்துனர்' என்று முறையிட்டு அழைத்துக் கொள்வது உண்டு; அந்த அளவுக்கு நெருங்கிய பிணைப்பு!

வட இந்தியாவில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டபோது கூடத் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கும்--இந்துக்களுக்கு மிடையிலான நல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படவில்லை; காரணம் முஸ்லிம்கள் மார்க்கத்தால் இஸ்லாமியர்- மொழியால் தமிழர்--கலாச்சாரத்தால் திராவிடர்! அதுபோலவே கிறித்துவர்களும்!

உதாரணத்திற்கு ஒன்று; கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகத் தனிநாயகம் அடிகளார் இருக்கிறார்; இவர் மதத்தால் கிறித்துவர்; தனித் தமிழ்ப் பெயர் கொண்ட இவர் மொழியால் தமிழர்!

இவரிடம் நீங்கள் எந்த இனத்தவர் என்றால் தமிழர் என்பார்; எந்த ஊர் என்றால் யாழ்ப்பாணம் என்பார்; எந்த மதத்தவர் என்றால் 'கிறித்துவர்' என்பார். இப்படி மொழியால் தமிழர்களாக இருக்கின்றனர்!

ஒரு காலத்தில் நாங்கள் தமிழர் அல்லர் என்று கருதிக் கொண்டிருந்த பார்ப்பனர்கள்கூட இப்போது நாங்கள் தமிழர்கள் அல்லவா? என்று கேட்பதைப் பார்க்கிறோம்.

வியாபாரம் செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றன தமிழையும் வியாபாரப் பொருளாக்கி விடக் கூடாது!

பொங்கல் திருநாள் என்பது அறுவடைத் திருநாள்!

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது பழமொழி; ஏனெனில் அப்போதுதான் அறுவடை ஆன பொருளை விற்றுப் பணம் கைக்கு வந்திருக்கும்! வீட்டில் பணமும் பொருளும் இருக்கும்.