பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டானி ♦ 17



கழனி திருத்தி விதை தெளித்து--'களை களைந்து நாற்று நட்டு பயிர் வளர்த்து-கதிர் முற்றியதும் அறுத்து--களம் சேர்த்து--மணிகள் குவித்து - புடைத்து--மூட்டை கட்டி விற்றுப் பணமாக்குவான் உழவன்!

அந்தப் பணத்தோடு அங்காடிக் கடைக்குச் செல்லும் அவன் மனைவிக்குச் சேலையும்--பழங்களும்--வாசனைப் பொருள்களும் வாங்கிக்கொண்டு வீடு வருகிறான். அதாவது களத்தில் அறுவடை செய்த அந்த உழைப்பாளி கடைகளில் செய்த 'அறுவடையுடன் வீடு வருகிறான்-- அதுதான் பொங்கல்!

உழைப்பின் பயனை உணர்த்துகின்ற இந்தத் திருநாள் நாடுகளில்--பல வகைகளில்--பல முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது!

நல்ல நிலம் பார்த்து--தக்க காலமறிந்து பதமாக--பக்குவமாக விதை தூவி, பயிர் விளைவிக்கும் முயற்சியிலே ஆணுடன் பெண்ணும் பங்கு கொள்கிறார்கள்! இருவரின் உழைப்பின் பயனும் களஞ்சியம் போய்ச் சேருகிறது! ஆகவே பெண்ணுக்குள்ள பங்கையும் புலப்படுத்துவது இந்தத் திருநாள்!

எனவே. இத் திருநாள் கிறித்துவர்கட்கோ--முஸ்லிம்களுக்கோ முரணானதல்வ! தமிழர்கள் அனைவருக்குமே உரிய திருநாளாகும்!

(1965-ல் சிங்கப்பூர் 'தேசிய அரங்கில்' துறைமுகத் தொழிலாளர்கள் சார்பில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதி)

6. "உழுதோம் உயர்ந்தோம்"-- இதுவே தமிழர் திருநாள்

பொங்கல் புதுநாள் புலர்ந்தது--மக்களின் முகமெல்லாம் மலர்ந்தது! மகிழ்ச்சி மிளிர்ந்திடக் காண்கிறோம்.


2.3.