பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ♦ அறிஞர் அண்ணா



நாடெங்கும் விழா நானாவிதமான விழா நடக்கக் கண்டோம்.

காலை மலர்ந்தது-மனிதரெல்லாம் கண் மலர்ந்து நடமாடுகின்றார்; கதிரோன் ஒளி பரப்பினான்; காகங் கரைந்தது--கோழி கூவிற்று; நீர்த் தெளிக்கும் நங்கையரின் வளை ஒலியும் கிளம்பிற்று!

"வாரீர்; நீராடி--புத்தாடை பூண்டு--புது அரிசியைப் புதுக் கலத்திலிட்டு அமுதாக்கி--பச்சைக் காய்கறியைப் பக்குவமாகச் சமைத்து-பாடி ஆடி உண்போம்" என்றுரைத் தீர்--களித்தீர்!

"உமது வாழ்வு இன்பம் பொங்கிட இருத்தல் வேண்டும்" என்று நாம் இங்கு 'நல் வாழ்த்து' நல்கிய வண்ணம் இருக்கிறோம்.

பொங்கல் பருவத்தில் நாம் நமது வாசகர்கட்கு--"இதய"மெனும் கலத்தில் 'நினைப்'பெனும் பால் பெய்து நல் வாழ்த்தெனும் அமுது கலந்து இம்மடலில் அளித்திடக் களிக்கிறோம்!

'பொங்கல் புது நாள்--அறுவடையின் ஆனந்தத்தை--அகமகிழ்வைத் தமிழகம் கொண்டாடிய ஓர் வகையே' என்போம்!

"பருவத்தில் பயிர் செய்தோம்--பலன் உண்டோம்" என்பதே அந்நாளின் பண் என்போம்!

கரடு முரடான நிலத்தைக் கூர்மையான கலப்பை கொண்டு குத்திக் கிளறினோம்; அடி மண் மேல் வர--கல் உடைந்தழிய-கரம்பு திருத்தி உழைத்தோம்!

பெய்யும் மழை என்றும் பெய்தவண்ணம் இராது; எனவே, பெருங்குளம்--சிறுகுள மெடுத்து--ஆறு அமைத்து வாய்க்கால் வெட்டி-நீர்த் தேக்கினோம்; ஆகவே, அந்நீரை நிலமடந்தைப் பருகத் தந்தோம்; பருவமுற்ற மங்கைக்கு மணாளனைச் சேர்த்தல் போல் நிலப் பண்புக்கேற்ற விதை