பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 19



தூவினோம்; "களித்த காதலர் காணும் குழவி” எனப் பயிர் தழைக்கக் கண்டோம்!

"இன்று கண்டோம் அதன் பலனை" என்று--உழைப்பின் மேன்மையை உணரும் உத்தம நாள்" என்போம்.

சுற்றமும் நட்பும் சூழ--களிப்பும் கனிவும் வாழ--தமிழர் வாழ்ந்தனர்" என்பதை விளக்குவது போல் வீடுதோறும் உள்ளூர் உறவினர் வருவதும், உரையாடிக் களிப்பதும், பெரியார் பாதம் வருடலும், பெண்டிர் பெருமை புகழ்தலும் நடக்கக் காண்கிறோம்; எனவே இதுவே தமிழர் திருநாள் என்போம்

சந்தனமும் சண்பகமும்- தேமாவும் தீம்பலாவும்--அரிசியும் அசோகமும் கொங்கும் வேங்கையும் ஒருபுறம் மணம் பரப்ப, பாதிரியும் கொன்றையும், புன்னாகமும் குயிலாசனமாக மலர்புரி புகுந்து மதுமங்கையை மணந்தவண்டரசர் குழாம் பாட--சிந்தனையில் சிறுவீட்ழிந்துச்சேல் விழியைப் பழித்துச் சோலைக்கு இழுத்துக் காதலைப் பழுக்கவைத்த கண்ணாளனின் நினைவு நடமாட--அழகு படமாட--அணங்குகள் நடந்து செல்லும் காட்சியும், "உழைத்தோம்-உயர்ந்தோம்; உழுதோம்--அறுத்தெடுத்தோம்; போரிட்டோம்--வென்றோம்; பயின்றோம்--பக்குவம் பெற்றோம்; ஒத்த உளமுடையாரைக் கொண்டோம்--வாழ்வின் இன்பம் உண்டோம்" என்று திருப்தி பெற்று படைக்கலனுடனோ--தொழிற்கலனுடனோ நடமாடும் ஆடவரின் காட்சியும், துறைமுகங்களிலேயவனரா இவர்? சீனரா இவர்? சேல்--விழியாளுக்கு ஏற்ற இவ்வணி எத்தனை நூறு செம்பொன்னோ? யவன மன்னரிடம் பெற்ற பரிசு இதுவோ? எப்போது பெரும் பரிசுகள் வரும்? என்று கேட்டு உலாவும் வணிகக் கூட்டமும் கடலை அடக்கிக் கலத்தைச் செலுத்தும் வீரர்களின் விளையாட்டும், பொருள் ஈட்டிய பூரிப்பால் புது உரு கொண்ட புன்னகையினர் உலாவும் மாட்சியும், 'என்னோடு--இன்பம் நாடு--மணி இழைத்த பொன்னோடு