பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ♦ அறிஞர் அண்ணா



என்று பாடும் புலவர்களும், அவர்களின் திறம் வியந்து திரவியம் தரும் மன்னர்கள் வாழ்ந்த மனோகரமும்; செந்நெல்வயலின் வளற்றன்மைக்கும்--சிங்கார சோலைகளின் கனிவுக்கும் ஏற்பட்ட போட்டியிலே 'வெல்வோர்க்கு இதுபரிசு' என்று கூறி--முத்துக் குவியலைத் தருவேன் என்றுரைப்பது போல் ஒலிக்கும் கடலின் காட்சியும் கவிதைகளுக்கு மாட்சி தந்தன!

தமிழகத்தின் தொல் சிறப்பு சொல்லவும் கேட்கவும் தெவிட்டாததாகவே இருந்தது?

தோள் வலியும்--மன வலியும்--சொல்வலியும் அறிவு வன்மையும், பெற்றோரின் ஆலயமாக விளங்கிற்று.

அன்று இருந்ததை இன்றோடு இழந்தோம்; ஆயினும் என்ன? நிலத்திலே நெடுந்தூர ஆழத்தில் தூங்கும் தங்கத்தை எழுப்புகிறோம்--வெளியில் நடமாட வைக்கிறோம்

சுறாவும், சுழலும் சுற்றிலும் நடனமிட, நீர் மாளிகையில் களித்துக் கிடக்கும் முத்துக்களை மூக்கை அடக்கி உள்ளே சென்று வெளியே கொண்டு வந்து 'நட', 'நட' என்கிறோம்!

உழைத்தால் பலன் காண்கிறோம்!

அதுபோலவே, இழந்த இன்பத்தையும் மீண்டும் பெற முடியும்--பெறல் வேண்டும்!

நெஞ்சிலே வலுவிருப்பின், வெற்றி தஞ்சமென்றுரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி!

நம் மனதில் உறுதி கொண்டால், தமிழகத்தில் இன்பம் பொங்க வாழ்வு பொங்க--புரட்சி பொங்கிப்புதுமை பொங்க வளம் பொங்கச் செய்ய முடியும்; அந்தப் பொங்கற் புதுநாள் வரத்தான் போகிறது! நம் நாடு

(நம் நாடு — அண்ணா)