பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 21



7. அரசு ஊழியர்களுக்கு அண்ணா அறிவுரை

நானும் உங்களில் ஒருவன்

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் உங்களுக்கு மனக் குமுறல் நிரம்ப உண்டு; ஊதிய அமைப்பில்--வேலை வாய்ப்புகளில்-முன்னேற்றம் பற்றி உங்களுக்கு குறைகள் இருக்கின்றன என்பதை நான் அறிவேன்; முடிந்தவரையில் நானும், என் நண்பர்களும் அவற்றில் நிச்சயம் அக்கறை காட்டி ஆவன செய்ய முயலுவோம்.

உங்கள் குறைகள் ஏற்கெனவே உள்ள மனக்குறைகள்; நாங்களோ புதிதாக வந்தவர்கள்; எனவே 'அய்யோ--பாவம் என்ற உணர்ச்சியோடு எங்களை அணுக வேண்டுகின்றோம்.

உங்கள் குறைகளுக்குப் பரிகாரம் தேடி எங்களுக்கு உடனடியாகத் தொல்லை கொடுக்காதீர்கள்! ஒரேயடியாகத் தொல்லை கொடுக்காதீர்கள்!

'மற்ற விஷயமெல்லாம் தெறிகிற இவர்களுக்கு இதுதானா தெரியாது!" என்று எண்ணிடாமல் 'அய்யோ-பாவம்! இவர்களுக்கு இதெல்லாம் தெரியாது; சொல்லிக் கொடுப்போம்' என்ற அந்த எண்ணத்தோடு எங்களை அணுகுங்கள்!

உங்கள் குறைகளை நாங்கள் மெல்ல மெல்ல நிதானமாகத் தீர்ப்போம்; ஆனால் நிச்சயமாகத் தீர்ப்போம்!

அரசு அலுவலகங்களில் பணியாற்றுகிறவர்கள் என்று உங்களை நான் அறிந்திருப்பதை விட உங்கள் வீடுகளில் நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்!

நான் காஞ்சிபுரம் நகர மன்றத்தில் ஓர் எழுத்தாளனாகப் பணியாற்றியிருக்கிறேன்; அதுவே