பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி 23 உங்கள் வீட்டு முதல் பிள்ளை உங்கள் அத்தனை பேருடைய அன்புக்கு அரணாக இருக்கின்ற வரையில் நிச்சயம் நாங்கள் எடுத்த பணியில் வெற்றி பெறுவோம். தலைமைச் செயலாளர் அவர்கள் என்னை முதலமைச்சர் என்று கூறினார். உங்கள் அலுவலகத்தைவிட உங்கள் இல்லத்தைப் பற்றியும், உங்கள் இல்லங்களில் உள்ள கஷ்டம் பற்றியும் நான் நன்றாக உணர்ந்திருப்பதால், உங்களின் முதலமைச்சர் என்பதைவிட உங்கள் வீட்டிலுள்ள முதல் பிள்ளை என்று கருதி ஒத்துழைப்புத் தர வேண்டும். (கோட்டை ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்களிடையே அண்ணா பேசியது.) ஆட்சி ஒரு தொடர்கதை-சிறுகதை அல்ல தொழிலாளர்களுக்காகப் பணி புரிகின்றவர்கள் சமுதாயத்தின் மதிப்பைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாக வும் இருக்க வேண்டும். "முதலில் கடமையைச் செய்யுங்கள், பிறகு உரிமையைக் கேளுங்கள்" என்று முன்பு (ஆட்சியில்) இருந்தவர்கள் சொன்னதாகவும், ஆனால் நாங்கள் (தொழிலாளர்கள்) கடமையைச் செய்தும், உரிமையை அவர்கள் தரவில்லை என்பதாகவும் இங்கு கூறப்பட்டது. இந்த முறையில் பேசுவது சரியல்ல. இந்தத் தப்பான முறையைப் பின்பற்ற வேண்டாம். நான் எனது காலத்தில் முடிந்ததைச் செய்வேன். எனக்குப் பின் வருபவர்கள் இயன்றதைச் செய்வார்கள். இது தொடர்கதையே தவிர தனித்தனிச் சிறுகதை அல்ல.