பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ♦ அறிஞர் அண்ணா



"எங்கள் கோரிக்கைகளை இதோ எழுதித் தந்திருக்கிறோம்; படித்துப் பாருங்கள்! அதில் நியாயம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால், செய்யுங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்" என்று இங்கு கூறப்பட்டது. நியாயம் நிச்சயம் இருப்பதால் தான் இவ்வளவு தைரியமாகப் பேச முடிகிறது. ஆனால் நியாயம்கூட அதிக விலை என்றால் அதை வாங்குவது கடினம். என்னிடம் கொடுக்கப்பட்டுள்ள பெட்டிதான் பெரிது. பணம் சிறிது.

மந்திரியே தவிர மந்திரக்காரன் அல்ல

மந்திரி என்றால் மந்திரக்காரன் அல்ல. நீங்கள் வந்து பாருங்கள், உங்கள் பணத்தை இப்படி இப்படிப் பங்கிட்டு வைத்திருக்கிறேன் என்று 'காட்டுகிறேன். அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இதற்குப் போடலாம். இதிலிருந்து அதற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று உங்களுக்கு உண்மை, நியாயம் என்று தோன்றினால் செய்யுங்கள்.

நான் உங்கள் கஷ்டத்தை அறியாதவன் அல்ல; உங்கள் மத்தியிலிருந்து வந்தவன்தான்--எங்கிருந்தோ வந்தவன் அல்ல.

உங்கள் குடும்பம் தழைக்க வேண்டும். உங்கள் குடும்பங்களில் நிம்மதி நிலவ வேண்டும் என்பதே என் ஆசை.

ரூபாய்கக்கு படி அரிசித் திட்டத்தை நான் கொண்டு வந்தபோது, அதிகாரிகள் என்னைக் கோபத்தோடு. அல்ல பரிதாபத்தோடு பார்த்தார்கள். 'விபரம் தெரியாமல் செய்கிறானே' என்ற அனுதாபம் அவர்கள் பார்வையில் இருந்தது.

ஏழை மக்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய விலையில் உணவு வழங்கப்படவில்லையானால், நாட்டில் எந்த நல்ல காரியமும் சரியாக நடைபெறாது எனக் கருதுபவன் நான். அதனால்தான், யாரும் செய்யக் கூடாத காரியத்தை "செய்யக்கூடாது" என்று மற்றவர்கள் சொல்லும்