பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 25



காரியத்தை--ரூபாய்க்கு படி அரிசித் திட்டத்தைச் செய்யத் துணிகிறேன்.

எதிர்காலம் தொழிலாளர்களுக்கே!

எதிர்காலம் தொழிலாளர்களுடையது என்பது அய்யமில்லை. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய தொழிலாளர் அரசாகத்தான் அமையும்.

தொழிலாளர்களுடைய கோரிக்கைகளில் அரசு உள்ள நியாயத்தை நான் ஏற்கிறேன். அக்கறையோடு கவனிப்பேன். உடனடியாகச் செய்யக் கூடியதை உடனடியாகச் செய்வேன். படிப்படியாகச் செய்யவேண்டியதைப் படிப்படியாகச் செய்வேன்.

கல்வித் திட்டத்தின் கீழ் பொது அறிவு போதனை

தொழிலாளர்களுக்குக் கல்வி. போதிக்கப்படுவதைக் காண மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டில் ஒரு கெட்ட பழக்கம், படிப்பவன் வேலை செய்ய மாட்டான். ஆனால் இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, தொழிலாளர்கள், தங்கள் வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் கல்வியறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கல்வி பெறுவது அவர்கள் தொழிலுக்கே பயன்படும். அதோடும் கூட மற்ற பொது அறிவைப் பெறுவதும் நல்லது. உதாரணமாக அரசாங்க நிதி நிலையைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது நல்லது. அவ்வாறு தெரிந்திருந்தால் அளவு மீறிய கோரிக்கைகளை எழுப்ப மாட்டார்கள். நாம் கேட்டால்கூட, அவர்கள் எங்கிருந்து தருவார்கள்? என்பது தெரிந்துவிட்டால் கேட்கவே மாட்டார்கள்.

ஈர விறகுதான் கிடைத்திருக்கிறது

"மணி என்னாகிறது, இன்னுமா ஆகவில்லை" என்று அடுப்பங்கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தால் என்ன ஆகும்? "நீங்கள் வாங்கிவந்த ஈர விறகு இலட்சணம் அப்படி;