பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ♦ அறிஞர் அண்ணா



அவசரப்பட்டால் முடியாது; மணி மூன்றாகும்" என்று பதில் வரும்.

அதைப் போல் எங்களிடம் "ஈர விறகு" தரப்பட்டிருக்கிறது. ஊதி ஊதிப் பார்க்கிறோம். பற்றினால் சரி, வேக வேண்டியது வேகும். அவ்வளவு தான் நான் சொல்லுவேன். மற்றதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

(சென்னை அரசு அச்சகத் தொழிலாளர் கூட்டத்தில், தொழிலாளர்களுக்கான கல்வித் திட்டத்தில் பங்கு கொண்டு தேர்வு பெற்ற தொழிலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி அண்ணா ஆற்றிய உரை)

8. அஞ்சல் ஊழியர் பற்றி அண்ணா

எந்தக் கட்சியின் சார்பில் ஒருவர் உறுப்பினர் ஆகின்றார் என்பது முக்கியமான பிரச்சினை அல்ல; அவர், 'எந்த பிரச்சனைக்காக உறுப்பினராக ஆகியிருக்கிறார்' என்பதுதான் பிரச்சனை!

தபால் தந்தி இலாக்காவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கென ஒரு பிரதிநிதியை-கீழ்ச் சபைக்கு இல்லா விட்டாலும், மேல் சபைக்காவது-கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும்; இப்படிப்பட்டவர்கள் அப்படிப்பட்ட இடங்களில் இருக்க வேண்டும்.

இப்போது கலைஞர்களுக்கும்--ஆசிரியர்களுக்கும் பட்டதாரிகளுக்கும்--இன்னும் பிறருக்கும் அரசியல் மன்றங்களில் இடம் கொடுத்திருக்கும்போது, இதுபோன்ற அலுவல்கத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்காக ஒரு பிரதிநிதித்துவம் அரசாங்கம் ஏன் கொடுக்கக்கூடாது? கொடுத்தால் என்ன கெட்டுவிடும்?

இந்த அலுவலகங்களில் பல் ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அரசியல் மன்றங்களுக்கு வந்தால், பிரச்சினையை அவர்கள் தெளிவாக விளக்க முடியும்.