பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ♦ அறிஞர் அண்ணா



இது தொழிலாளருக்கு உதவி செய்யும் பொறி அல்ல. உபத்திரவம் தருகிற ஒன்று.

இன்றைய நிலையில், ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்து--அவர்கள் வாழ்வில் மலர்ச்சியை உருவாக்கும் கருவி அல்ல இது ! அவர்களின் கண்களில் மருட்சியை உருவாக்கும் ஒன்று!

நாள் முழுவதும் ஓர் ஊழியர் வேலை செய்து முடித்து, வேலைப் பளுவால் சோர்ந்து கிடக்கும்போது தனக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கும்போது 'ஊழியர்க்கு உதவி செய்யும் கருவி இது' என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்!

'இறகுப் பேனாவுக்குப் பதில் ஊற்றுப் பேனா என்றால், பனை விசிறிக்கு பதில் மின்சார விசிறி' என்றால், "கட்டை வண்டிக்குப் பதில் தொடர் வண்டி' என்றால்--இவையெல்லாம் வேலைப் பளுவைக் குறைக்கின்ற சாதனங்கள்!

'வேலையில்லாத் திண்டாட்டம்' என்று ஒரு பக்கம் நாடாளுமன்றம் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றது! ஆனால் இங்கேயோ--ஆயிரக்கணக்கில் வேலையில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டம் மும்முரமாகச் செயல்படுத்தப்படுகிறது! எனவே, ஆட்சியாளரின் நோக்கத்தில் நமக்கு சந்தேகம் ஏற்படுகிறது!

"சென்ற தலைமுறையில் தொழிலாளர் வர்க்கம் அடக்க ஒடுக்கமாக் இருந்தது; சொன்ன வேலையைத் தொழிலாளர்கள் செய்தார்கள! கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டார்கள்; இன்றையத் தொழிலாளர்களோ, அடக்கமற்றவர்களாக-கிளர்ச்சிக்காரர்களாக--நன்றி மறந்தவர்களாக இருக்கிறார்கள்". இப்படி இந்திய அரசு நினைக்கிறது!