பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 29



அதிலும் குறிப்பாக எல்.அய்.சி. போன்ற அமைப்புகளில் பணி புரியும் வெள்ளுடை ஊழியர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை! வெள்ளுடை ஊழியர் அணியைச் சிதைக்க இந்திய அரசு மேற்கொண்ட சதிச் செயல்கள் பலன் தரவில்லை!

பார்த்தார்கள் ஆட்சியாளர்கள்-"இவர்களை நம்பிக் கிடப்பதால்தானே இந்தத் தொல்லை? மின் விசைக் கணக்குப் பொறிகளை இறக்குமதி செய் -அவற்றை தொழிலகங்களில் பயன்படுத்து-அவை கிளர்ச்சி செய்ய மாட்டா--ஆணைக்கு அடங்கி அமைதியாக வேலை செய்யும்" என்று முடிவு செய்துவிட்டார்கள். அதன் மூலம், "தொழிலாளர் பிரச்சனையை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்' என்று எண்ணினார்கள்; அதன் விளைவுதான், மின் விசைப் பொறிகளை இங்கே நுழைத்த செயல் ஆகும்!

எனவே, 'இது தொழிலாளர் விரோத நடவடிக்கை; சமூக விரோத நடவடிக்கை' என்று நான் துணிந்து குற்றஞ் சாட்டுகிறேன்!

இங்கே தொழில் செய்ய வல்லவர்கள் நிரம்ப உண்டு அவர்களிடம் ஆற்றல் இருக்கிறது. ஆனால் வேலைதான் இல்லை!

இப்படிப்பட்ட நிலையிலா மின் விசைப் பொறிகளைக் கணக்குத் துறையில் நுழைப்பது?

(28-5-66-ல் கோவையில் நடைபெற்ற எல்.அய்.சி.

ஊழியர் கூட்டத்தில் அண்ணா பேசியது

)

10. டாக்ஸி-ஆட்டோ
ஓட்டுனர்களுக்கு அண்ணா அறிவுரை

நாட்டில் ஒரு தொழிலிலே ஈடுபட்டுள்ளவர்கள், அதில் நிம்மதி பெறுவது கிடையாது; அடுத்த தொழில்மீது தான் ஆசைப்படுவார்கள்?