பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iii


அறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்


சி.என்.அண்ணாத்துரை
தோற்றம் - 15 - 9 -1909
தந்தை - நடராசன்
தாய் - பங்காரு அம்மாள்
பிறந்த ஊர் - சின்ன காஞ்சிபுரம்
வாழ்க்கைத் துணை - இராணி அம்மையார்
புனைபெயர் - சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன்
1929 - 1934 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ ஆனர்சு பொருளியல் பட்டப்படிப்பு
11-2-1934 - முதல் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது
1-2-1936 - சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் 'பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும்காங்கிரசும்' பற்றிச் சொற்பொழிவு
1936 - சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிகட்சி உறுப்பினராக நிற்றல்
11-4-1937 - நீதிக்கட்சிச் செயற்குழு உறுப்பினராதல்
1937 - விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி
9-12-37 - முதற்கவிதை, 'காங்கிரஸ் ஊழல்' விடுதலையில்
26-9-38 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு நான்கு மாத வெறுங்காவல்