பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 33


12. அண்ணாவும் கைத்தறியும்

விஞ்ஞானம் இன்று பெரும் அளவு வளர்ந்துள்ளது; மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்த இடத்தில்--மோட்டார் போன்ற வாகனங்கள் இடம் பெற்றிருக்கின்றன! உரலும் உலக்கையும் இருந்த இடத்தில்--நெல் அரைக்கும் இயந்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன! இப்படி--இன்று எத்தனையோ எண்ணற்ற விஞ்ஞானக் கருவிகள், நமது வாழ்வில் இடம் பெற்றுள்ளன!

விஞ்ஞானத்தையும்-முற்போக்கையும் வரவேற்கின்ற நாம், 'மக்கள் மிகக் குறைவாக உழைத்து நிரம்பப் பலன்பெற வேண்டும். என்று பாடுபட்டு வருகின்ற நாம்--ஆலைகள் தோன்றிவிட்ட பிறகும், 'கைத்தறி இருக்க வேண்டும்' என்கிறோம்; மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் முரண்பாடு போலத் தோன்றும்; ஆனால் முரண்பாடு அல்ல!

குதிரை வண்டியும்-மாட்டு வண்டியும், மோட்டார் போன்ற வாகனங்களுடன் போட்டி போட முடியாது; உரலும் உலக்கையும் இயந்திரங்களுடன் போட்டியிட முடியாது; மாறாக, ஆலைகளுடன் கைத்தறி போட்டி போட முடிகிறது; ஆலைகள் எந்தெந்த ரகங்களில் துணிகளை நெய்கின்றனவோ, அந்த அளவுக்கு ஏறத்தாழ. எல்லா ரகத் துணிகளையும் கைத்தறியில் நெய்ய முடிகிறது!

விஞ்ஞான வளர்ச்சியை எதிர்த்து வேறு எதுவும் போட்டியிட முடியாமல் இருக்கும்போது, கைத்தறி மட்டும்--ஆலைகளை எதிர்த்து நின்று இன்றுவரை நிலைத் திருக்கின்றது; எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக் கூடியது! எனவேதான், 'மக்களின் உழைப்பைக் குறைத்து, வசதிகளை அதிகரிக்க விஞ்ஞான வளர்ச்சி தேவை" என்கிற நாம் கைத்தறி மட்டும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றோம்.


2.4.