பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ♦ அறிஞர் அண்ணா



கைத்தறியாளர்ப் பிரச்சினையிலேனும் எல்லாக் கட்சியினரும்--கட்சிகளை மறந்து ஒன்று படுகின்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தவரின் பெருந்தன்மைக்கு நன்றி செலுத்துகிறேன்!

விழாக்கள்--பொதுவாக மகிழ்ச்சியின் அடிப்படையில் அமைக்கப்படும்; இந்த விழாவில் கூடியிருக்கின்ற நாம், மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்; ஆனால் இந்த விழா யாருக்காக நடைபெறுகின்றதோ அந்த நெசவாளர்கள்--மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறமுடியாது.

அந்தக் கைத்தறித் தொழிலாளர் நிலை இன்று மகிழ்ச்சி தரத்தக்கதாக இல்லை!

இந்த விழாவில் கலந்து கொண்ட முதன் மந்திரி காமராசர் அவர்கள். இன்று நாட்டில் கைத்தறித் துணிகள்--ஒருகோடி ரூபாய் பெறுமானமுள்ளவை--விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது, என்று கூறியிருக்கிறார். அரசு தரும் புள்ளி விபரம் அது; ஆனால், நாட்டில் இரண்டு அல்லது மூன்று கோடிரூபாய் பெறுமான முள்ள துணிகள் தேங்கிக்கிடக்கக் கூடும்.

இதற்குக் காரணம் என்ன? கைத்தறித் துணிகள்--ஆலைகளிலிருந்து வந்து குவியும் துணிகளுடன் போட்டியிட முடியாதது தானே? "கூட்டாக இருத்தல்" என்ற நிலை அரசியலுக்கு-அதுவும் சர்வதேச அரசியலுக்கு சாதகமானதாக இருக்கலாம்; ஆனால், கைத்தறியும் ஆலையும் கூட்டாக வாழ்தல் சாத்தியமா என்றால், இல்லையே!

கைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வேண்டும்; கைத்தறித்துணிகளுக்கு ஏற்படும் கடும் போட்டிகளை சமாளிக்க வேண்டும்-- எத்தனை கணைகளைத் தான் நெசவாளி தாங்குவது?

நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்--இரண்டு பெண்டாட்டிக்காரன்பாடு திண்டாட்டம்' என்று; ஆனால்,